இது நாள் வரை மழை
பெய்ய ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணம் நெனச்சிட்டு இருந்திருப்போம். ஆனா
இங்கே கீழே இருக்குற படத்தை பார்த்தா உண்மையான காரணம் தெரியவரும்.
நம்ம ஹீரோ மேகம் ஹீரோயின் மேகத்தை லவ் பண்ண பிட்டு போடறார். ஹீரோயினும் கண்ணடிச்சு ஓகே சொல்றாங்க...
ஹீரோயின் மேகம் இன்னொரு மேகம், யாருயா அது? வேற யாரு? ஹீரோயின்
அப்பா தான். ஹீரோ மேகத்துக்கு வார்னிங் கொடுக்கிறாரு. எம்பொண்ணை பார்த்த...
பேசின.... அப்படி இப்படின்னு நிறைய டயலாக் பேசுறாரு.
"போகுதே... போகுதே... என் பைங்கிளி வானிலே...." அப்படின்னு நம்ம
ஹீரோ மேகம் ஹீரோயின் மேகத்தை பார்த்து சோகமா பாடறாரு. ஹீரோயின் மேகத்தை
அந்த வில்லன் அப்பா தரதர என இழுத்துட்டு போறாரு. அப்பா பேச்சை தட்ட
முடியாத ஹீரோயின், ஹீரோவை ஏக்கமா பாக்கறாங்க.
அடடா.... காதல் முறிஞ்சு போச்சே.... நம்ம ஹீரோவுக்கு, ஒரு பிகர
கரெக்ட் பண்ணி அதை லவ் செய்ய இம்புட்டு பாடுபட்டும் தோல்வியா ஆயிருச்சே....
வேற வழி தெரியாம நம்ம ஹீரோ குலுங்கி குலுங்கி அழ ஆரம்பிச்சுட்டார். ஒரு ஆம்பிள இப்படி அழலாமா?
ஓ... இதனால தான் வானத்துல இடி இடிச்சு, மின்னல் வெட்டுடன் மழை
பெய்யுதா? அப்ப காதல் தோல்வி ரொம்ப இருக்கும் போல வானத்துல.... எப்படியோ
நமக்கு மழை பெய்தா சரி?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக